TNPSC Thervupettagam

Blue Book - நெறிமுறை விதிகள்

March 11 , 2026 14 hrs 0 min 34 0
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மேற்கு வங்காளத்திற்குச் சென்ற போது, முதலமைச்சரோ அல்லது நியமிக்கப்பட்ட அமைச்சரோ அவரை வரவேற்கவில்லை என்பதோடு இது Blue Book நெறிமுறை விதிகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
  • Blue Book என்பது இந்தியக் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் வருகைக்கான பாதுகாப்பு, தளவாடங்கள் மற்றும் நிகழ்ச்சி நெறிமுறைகளை வகுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ரகசிய கையேடு ஆகும்.
  • உயர் மட்டப் பிரமுகர்களை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வரவேற்க வேண்டும் என்றும், அனைத்து இடப் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இது கட்டாயப்படுத்துகிறது.
  • முதலமைச்சர் அங்கு வர இயலாத பட்சத்தில், நெறிமுறைகளின்படி ஒரு "அடுத்தநிலை அமைச்சர்" (பொதுவாக மாநில அமைச்சரவையின் மூத்த அமைச்சர்) குடியரசுத் தலைவரை வரவேற்க வேண்டும்.
  • விதிகளின்படி, ஒரு மாநகராட்சி மேயருக்கு "அடுத்தநிலை அமைச்சர்" அந்தஸ்து வழங்கப்பட முடியாது என்பதோடு மாநில அரசுகள் தம் வசதிக்காக இந்த நெறிமுறை விதிகளை மாற்ற முடியாது.
  • விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலை நுழைவுப் பகுதிகள் அல்லது துறைமுகங்களில் வரவேற்பு இடங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் Blue Book வரையறுக்கிறது என்பதோடு மேலும், இப்பிரமுகரை வரவேற்கும் அதிகாரிகளின் பட்டியல் அந்தந்த குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் அல்லது பிரதமரின் செயலகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • இந்தக் கையேடு மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் தலைவரிடம் இருக்கும் என்பதோடு இதன் விதிகளில் ஏதேனும் மாற்றம் செய்வது கடுமையான பாதுகாப்புக் குறைபாடாகக் கருதப்பட்டு விசாரணைக்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்