பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் (BNHS) ஆனது 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அசாமில் மிகவும் அருகிய இனம் என்ற நிலையில் உள்ள ஆறு கழுகுகளை வெளியிட உள்ளது.
இந்த வெளியீட்டில் காப்பகத்தில் வளர்க்கப்பட்ட மூன்று மெலிந்த அலகு கொண்ட கழுகுகள் மற்றும் மூன்று வெண் முதுகுக் கழுகுகள் அடங்கும்.
காம்ரூப் மாவட்டத்தின் இராணியில் உள்ள BNHS கழுகு வளங்காப்பு இனப்பெருக்க மையத்தில் இந்தக் கழுகுகள் வளர்க்கப்பட்டன.
அவை அசாமின் காம்ரூப் மற்றும் பிஸ்வநாத் மாவட்டங்களில் மிதமான நடைமுறை முறை மூலம் விடுவிக்கப்படும்.
கழுகுகளின் எண்ணிக்கையை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் மீட்டு எடுப்பதும் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.