TNPSC Thervupettagam
December 7 , 2025 83 days 239 0
  • தமிழ்நாடு அரசானது, BNSS (பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா) 2023 சட்டத்தின் 218(2) பிரிவினை இந்த மாநிலத்தின் அனைத்து காவல்துறையினருக்கும் நீட்டிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
  • இந்தப் பிரிவானது, பணியில் இருக்கும்போது செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களுக்காக எந்தவொரு காவல்துறை அதிகாரி மீதும் வழக்குத் தொடருவதற்கு முன்பு அரசாங்கத்தின் அனுமதியைக் கோருகிறது.
  • இதே போன்ற காப்பு முன்னர் CrPC (குற்றவியல் நடைமுறைச் சட்டம்) சட்டத்தின் 197 ஆம் பிரிவின் கீழ் இருந்தது, ஆனால் பழைய நீட்டிப்பு உத்தரவுகள் குறித்து கண்டறிய முடியவில்லை.
  • பொது ஒழுங்கைப் பேணுவதில் ஈடுபட்டுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்தக் காப்பு விதியைப் பயன்படுத்த, BNSS 2023 சட்டத்தின் 218(3) பிரிவின் கீழ் உள்ள அதிகாரங்களை அரசு பயன்படுத்தியது.
  • இந்தப் புதிய அறிவிப்பு ஆனது, 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான தனியார் புகார்கள் அல்லது வழக்குகளுக்கான விதிகளை மாற்றவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்