TNPSC Thervupettagam
July 8 , 2021 1406 days 1215 0
  • இந்தத் திட்டமானது காதி மற்றும் கிராமத் தொழில்துறை  ஆணையத்தினால் ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள நிச்லா மண்ட்வா எனும் ஒரு பழங்குடியினக் கிராமத்தில் தொடங்கப் பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் அந்த பகுதியிலுள்ள காலியான, வறண்ட கிராமப் பஞ்சாயத்து நிலத்தில் 5000 சிறப்பு வகை மூங்கில் செடிகள் நடப்பட்டன.
  • பாம் பூசாதுல்டா மற்றும் பாம்பூசா பாலிமார்பா எனும் இந்தச் சிறப்பு வகை மூங்கில் செடிகள் அசாமிலிருந்து கொண்டு வரப்பட்டன.
  • ஒரே இடத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மூங்கில் செடிகளை நடச் செய்து காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது (Khadi and Village Industries Commission – KVIC) உலக சாதனையைப் படைத்துள்ளது.
  • BOLD என்பதன் விரிவாக்கம் Bamboo Oasis on Lands in Drought (வறட்சியான நிலங்களில் அமைந்த மூங்கில் சோலை) என்பதாகும்.
  • இது KVIC அமைப்பினால் தொடங்கப் பட்டது.
  • இந்த முன்னெடுப்பானது சுதந்திர தினத்தின் 75வது  ஆண்டு நிறைவினைக்  கொண்டாடுவதற்காக வேண்டி (அசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில்) KVIC அமைப்பினால் நடத்தப்பட்டகாதி மூங்கில் திருவிழாவின்ஓர் அங்கமாக தொடங்கப் பட்டது.
  • பாலைவனமாக்கலைக் குறைப்பதற்காக வறண்ட மற்றும் பகுதியளவு வறட்சியுடைய பகுதிகளில் மூங்கில்கள் நிறைந்த பசுமை பகுதியினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்