இந்திய – வங்க தேச எல்லையில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தூப்ரி மாவட்டத்தில் CIBMS-ன் (விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு) கீழ் BOLD – QIT திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
BOLD – QIT (Border Electronically Dominated QRT Interception Technique) என்பது எல்லையில் மின்னணு முறையில் ஆதிக்கம் செலுத்தும் QRT
இடைமறிப்பு நுட்பம் என்பதின் விரிவாக்கம் ஆகும்.
BOLD – QIT ஆனது பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆற்றின் பாதுகாப்பற்ற பகுதிகளில் பல்வேறு வகையான உணர்விகளுடன் இந்திய - வங்க தேச எல்லையைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படையை அனுமதிக்கிறது.
மனித சக்தி ஒருங்கிணைப்பு, சூழ்நிலை விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான உணர்வி, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை ஏற்படுத்துதல், எழும் பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணச் செய்தல் ஆகியவை CIBMS (Comprehensive Integrated Border Management system)-ன் கொள்கைகளாகும்.
இந்தத் திறன்மிகு எல்லையானது புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருபுறம் அனுமதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சரக்குகளின் வரம்பற்ற இயக்கத்தையும் மற்றொரு புறம் எல்லையில் ஏற்படும் பாதுகாப்பு சவால்களைக் குறைத்தலையும் அனுமதிக்கிறது.