TNPSC Thervupettagam

BOLD – QIT திட்டம்

March 6 , 2019 2312 days 769 0
  • இந்திய – வங்க தேச எல்லையில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தூப்ரி மாவட்டத்தில் CIBMS-ன் (விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு) கீழ் BOLD – QIT திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • BOLD – QIT (Border Electronically Dominated QRT Interception Technique) என்பது எல்லையில் மின்னணு முறையில் ஆதிக்கம் செலுத்தும் QRT இடைமறிப்பு நுட்பம் என்பதின் விரிவாக்கம் ஆகும்.
  • BOLD – QIT ஆனது பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆற்றின் பாதுகாப்பற்ற பகுதிகளில் பல்வேறு வகையான உணர்விகளுடன் இந்திய - வங்க தேச எல்லையைப் பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படையை அனுமதிக்கிறது.
  • மனித சக்தி ஒருங்கிணைப்பு, சூழ்நிலை விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான உணர்வி, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை ஏற்படுத்துதல், எழும் பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு காணச் செய்தல் ஆகியவை CIBMS (Comprehensive Integrated Border Management system)-ன் கொள்கைகளாகும்.
  • இந்தத் திறன்மிகு எல்லையானது புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருபுறம் அனுமதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சரக்குகளின் வரம்பற்ற இயக்கத்தையும் மற்றொரு புறம் எல்லையில் ஏற்படும் பாதுகாப்பு சவால்களைக் குறைத்தலையும் அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்