இந்தத் திட்டமானது காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தினால் ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள நிச்லா மண்ட்வா எனும் ஒரு பழங்குடியினக் கிராமத்தில் தொடங்கப் பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் அந்த பகுதியிலுள்ள காலியான, வறண்ட கிராமப் பஞ்சாயத்து நிலத்தில் 5000 சிறப்பு வகை மூங்கில் செடிகள் நடப்பட்டன.
பாம் பூசாதுல்டா மற்றும் பாம்பூசா பாலிமார்பா எனும் இந்தச் சிறப்பு வகை மூங்கில் செடிகள் அசாமிலிருந்து கொண்டு வரப்பட்டன.
ஒரே இடத்தில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மூங்கில் செடிகளை நடச் செய்து காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது (Khadi and Village Industries Commission – KVIC) உலக சாதனையைப் படைத்துள்ளது.
BOLD என்பதன் விரிவாக்கம் Bamboo Oasis on Lands in Drought (வறட்சியான நிலங்களில் அமைந்த மூங்கில் சோலை) என்பதாகும்.
இது KVIC அமைப்பினால் தொடங்கப் பட்டது.
இந்த முன்னெடுப்பானது சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுவதற்காக வேண்டி (அசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில்) KVIC அமைப்பினால் நடத்தப்பட்ட “காதி மூங்கில் திருவிழாவின்” ஓர் அங்கமாக தொடங்கப் பட்டது.
பாலைவனமாக்கலைக் குறைப்பதற்காக வறண்ட மற்றும் பகுதியளவு வறட்சியுடைய பகுதிகளில் மூங்கில்கள் நிறைந்த பசுமை பகுதியினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.