TNPSC Thervupettagam
December 18 , 2022 888 days 457 0
  • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகமானது, காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தின் (KVIC) மூலம் "BOLD திட்டம்" என்ற ஒரு தனித்துவமான சோதனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • BOLD என்பது வறட்சியில் காணப்படும் நிலங்களில் அமைந்துள்ள மூங்கில் சோலை என்பதனைக் குறிக்கிறது.
  • பல்வேறு கிராமத் தொழில்கள் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மூங்கில் சாகுபடியின் சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகள் மற்றும் பொருளாதார ஆற்றலை அறிவியல் ரீதியாகப் பயன்படுத்தச் செய்வதுமே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
  • காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தின் கீழ் இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு வழங்கப் படவில்லை.
  • அசாம் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மூங்கில் கன்றுகள் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
  • இது ஒரு சோதனைத் திட்டம் மட்டுமே என்பதால் இந்தத் திட்டத்திற்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்