BRICS நாடுகளிடையே உற்பத்தித் திறன்களையும் தொழில்துறை ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா BRICS தொழில்துறைத் திறன் மையத்தில் (BCIC) இணைந்துள்ளது.
இந்த முயற்சி ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு அமைப்புடன் (UNIDO) இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
தேசிய உற்பத்தித்திறன் மன்றமானது (NPC) BCIC செயல்பாடுகளுக்கான இந்திய மையமாக நியமிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை 4.0 திறன்களை மேம்படுத்துவது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME-களுக்கு) ஆதரவளிப்பதே இதன் நோக்கமாகும்.