இது BRICS அமைப்பின் நிறுவனமயமாக்கப் பட்ட செயல்பாடு அல்ல என்று கூறி, இந்தியா ‘Will for Peace 2026' என்ற BRICS பிளஸ் கடற்படைப் பயிற்சியைத் தவிர்த்துள்ளது.
BRICS பிளஸ் கடற்படைப் பயிற்சி என்பது, முறையான BRICS கட்டமைப்புக்கு வெளியே நடத்தப்படுகின்ற ஒரு புரவலர் நாட்டால் வழி நடத்தப்படுகின்ற மற்றும் நிறுவன மயமாக்கப் படாத ஒரு கடல்சார் பயிற்சியாகும்.
இந்தக் கூட்டுப் பயிற்சியானது கேப் டவுனுக்கு அருகிலுள்ள சைமன்ஸ் டவுன் கடற்கரையில் தென்னாப்பிரிக்காவால் நடத்தப்பட்டது.
இதில் இந்தியா பங்கேற்காத நிலையில், சீனா, ரஷ்யா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்றன.
முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் கடல்சார் பொருளாதார நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு நடவடிக்கைகள் என்பதே இதன் மையக்கருத்தாக இருந்தது.