இந்திய ரிசர்வ் வங்கியானது 2021 ஆம் ஆண்டிற்கான BRICS பொருளாதார அறிக்கை என்பதினை வெளியிட்டது.
இது BRICS மத்திய வங்கிகளின் உறுப்பினர்களுடன் இணைந்து BRICS வருங்கால வைப்புச் சீரமைவு (CRA) என்ற ஆராய்ச்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்டது.
BRICS நாடுகளின் ஆராய்ச்சி, பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தச் செய்வதற்காக வருங்கால வைப்புச் சீரமைவு ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டது.
இந்த அறிக்கையானது, பொருளாதார மீட்சி மற்றும் அதன் மாறுபாடுகள், பணவீக்க அபாயங்கள், வெளியுறவுத் துறை செயல்திறன், நிதித் துறைப் பாதிப்புகள் மற்றும் பிற பெரும் பிரிவு பொருளாதார அபாயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, 'நடப்பில் உள்ள தொற்றுநோயை முறையாக நிர்வகித்தல்: BRICS நாடுகளின் பின்னடைவு மற்றும் மீட்சி அனுபவம்' என்ற கருத்துருவினைக் குறிக்கிறது.