2026 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் BRICS தலைமைத்துவத்தின் அதிகாரப்பூர்வ வலைத் தளம் மற்றும் முத்திரைச் சின்னம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்தக் குழுவின் 20வது ஆண்டு நிறைவை ஒட்டி, 2026 ஆம் ஆண்டில் இந்தியா BRICS தலைமைப் பொறுப்பை ஏற்கும்.
இதன் கருத்துரு ‘Building for resilience, innovation, cooperation, and sustainability’ என்பதாகும்.
BRICS என்பது வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான ஒரு தளமாகும்.
முத்திரைச் சின்னம் ஆனது அனைத்து உறுப்பினர் நாடுகளின் வண்ணங்களுடன் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தைக் கலந்து பன்முகத் தன்மையில் ஒற்றுமையைக் குறிக்கிறது.
இந்தியாவின் தலைமைப் பொறுப்பின் போது கூட்டங்கள், முன்னெடுப்பு மற்றும் விளைவுகள் குறித்த தகவல்களை இந்த வலைத்தளம் வழங்கும்.