The Unit என்பது BRICS நாடுகளின் உறுப்பினர்களின் முறைசாரா ஆதரவுடன் IRIAS (மேம்பட்ட அமைப்புகளுக்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம்) உருவாக்கிய ஒரு சோதனை முறையிலான டிஜிட்டல் வழி பணம் செலுத்துவதற்கான நாணயமாகும்.
இது BRICS நாடுகளின் பன்னாட்டு வர்த்தகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் மேலும் இது 40% தங்கம் மற்றும் 60% BRICS நாடுகளின் நாணய தளத்தினால் ஆதரிக்கப் படுகிறது.
பரிவர்த்தனைகள் ஆனது அனுமதிக்கப்பட்ட கார்டானோ தொடர்ச சங்கிலி நுட்பத்தில் இயங்குகின்றன என்ற நிலையில்இது பாதுகாப்பான மற்றும் ஒரு வெளிப்படையான பணம் செலுத்தல்களை உறுதி செய்கிறது.
இது அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உலகின் தெற்கு நாடுகளுக்கு ஒரு நடுநிலையான, நிலையான வர்த்தக-தீர்வு விருப்பத்தை உருவாக்குவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தேசிய நாணயங்களுக்கு மாற்றாக அல்ல, ஆனால் BRICS நாடுகளுக்குள் சர்வதேச வர்த்தக கொடுப்பனவுகளை ஆதரிப்பதற்காக மட்டுமே ஆகும்.