பேசல், ரோட்டர்டாம் மற்றும் ஸ்டாக்ஹோம் ஆகிய உடன்படிக்கைகளுக்கான (BRS COPs) பங்குதாரர்கள் மாநாடுகள் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த BRS COPs ஆனது, அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த உலகளாவிய நடவடிக்கையை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Make visible the invisible: sound management of chemicals and wastes" என்பதாகும்.
இந்தியக் குழுவானது, இரசாயனங்கள் மற்றும் கழிவுகளின் முறையான மேலாண்மை, வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்பத்திற்கான அணுகல் மற்றும் நெகிழி மாசுபாடுகள் குறித்த நடவடிக்கைகளுக்கான வலியுறுத்தல் ஆகியவற்றினை ஆதரித்தது.