2026 ஆம் ஆண்டிற்கான 15-வது பிரிக்ஸ் தொழிற்சங்க கூட்டமைப்பு (BTUF) உச்சி மாநாடானது ஹைதராபாத் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதுடன் ஹைதராபாத்தில் நிறைவடைந்தது.
இப்பிரகடனம் தொழிலாளர்களின் உரிமைகள், உலகளாவிய சமூகப் பாதுகாப்பு, உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக உரையாடல் மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
இந்தக் கூட்டமைப்பு தொழிலாளர் இயக்கம், திறன்களின் பரஸ்பர அங்கீகாரம் மற்றும் பிரிக்ஸ் நாடுகளிடையே வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல் குறித்து விவாதித்தது.
இது உலகப் பொருளாதாரத்தில் நியாயமான ஊதியம், பாதுகாப்பான வேலைச் சூழல் மற்றும் உழைப்பின் கண்ணியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது.
வலுவான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அரசாங்கங்கள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை இந்த உச்சி மாநாடு வலியுறுத்தியது.