சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, சமீபத்தில் ஹப்பிள் விண்வெளி தொலை நோக்கியைப் பயன்படுத்தி ஒன்பது வளையங்களைக் கொண்ட ஓர் அண்டத்தினைக் கண்டறிந்துள்ளது.
முன்னதாக கண்டறியப்பட்ட வளையங்களைக் கொண்ட அண்டங்கள் இரண்டு அல்லது மூன்று வளையங்களை மட்டுமே கொண்டிருந்ததால், அந்தக் குழு இதை "தற்செயலான கண்டுபிடிப்பு" என்று அழைத்தனர்.
இந்தச் அசாதாரண அண்டத்திற்கு LEDA 1313424 என்று பெயரிடப்பட்டுள்ளது ஆனால் அதன் பொதுவான பெயர் Bullseye அண்டமாகும்.
அந்த இரண்டு அண்டங்களும் சுமார் 130,000 ஒளி ஆண்டுகள் (அல்லது 1.22 பில்லியன் பில்லியன் கிலோ மீட்டர்) தொலைவு இடைவெளியில் அமைந்திருந்தாலும் அவற்றை இணைக்கும் ஒரு மெல்லிய வாயுப் பாதை இருப்பதாக இக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அண்டமானது, சுமார் 250,000 ஒளி ஆண்டுகள் விட்டம் கொண்ட பால்வெளி அண்டத்தினை விட சுமார் 2.5 மடங்கு பெரியதாகும்.
Bullseye அண்டமானது, ஒரு நாள் ஒரு பெரிய குறைந்த மேற்பரப்பு ஒளிர்வு (GLSB) கொண்ட அண்டமாகப் பரிணமிக்கக் கூடும் என்பதற்கான சிலபல அறிகுறிகளையும் கொண்டுள்ளது.
குறைந்த மேற்பரப்பு ஒளிர்வு கொண்ட அண்டங்களில் மிகப்பெரியவை மிகப்பெரிய குறைந்த மேற்பரப்பு ஒளிர்வு (GLSB) கொண்ட அண்டங்கள் ஆகும்.
அனைத்து GLSB அண்டங்களும் உண்மையிலேயே பிரம்மாண்டமானவையாகும்.
மாலின் 1 எனப்படும் மிகவும் பிரபலமான GLSB-ஆனது, பால்வெளி அண்டத்தினை விட தோராயமாக 6.5 மடங்கு அகலமானது மற்றும் அது அறியப்பட்ட மிகப்பெரியச் சுழல் அண்டங்களில் ஒன்றாகும்.