Business Line’s பத்திரிக்கையின் மாற்றத்தை ஏற்படுத்தியவருக்கான விருதுகள் 2019
March 19 , 2019 2304 days 798 0
மிகப் பரந்துபட்ட முரண்பாடுகளுக்கு எதிரான துறையில் சாதனைகளை நிகழ்த்திய சமூக தொழில் முனைவோர்களைக் கௌரவிப்பதற்காக Business Line பத்திரிக்கையின் மாற்றத்தை ஏற்படுத்தியவருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆண்டில் மாற்றத்தை ஏற்படுத்தியவருக்கான விருது
சரக்கு மற்றும் சேவைகள் வரி ஆணையம்
இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377-ற்கு எதிராக வழக்கு தொடுத்த மனுதாரர்கள்
மாற்றத்தை ஏற்படுத்தியவருக்கான இளையோர் விருது
அஞ்சு வெர்மா – பின்தங்கியுள்ள குழந்தைகளின் சமூக நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துவதற்கு கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
குஷ் மற்றும் அர்ஜுன் பாண்டோ விருது - கால்பந்து போட்டிகளில் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் காண்பதற்காக Scoutme என்ற தளத்தை உருவாக்கியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சமூக மாற்றத்திற்கான விருது
கலிங்கா சமூக அறிவியல் நிறுவனம் - மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் வாழ்பவர்களுக்கு தரமான கல்வியை அளித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மாற்றத்திற்கான விருது
மின்னணு முறையிலான தேசிய வேளாண் சந்தை (Enam - (National Agriculture Market)) – விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை நேரடியாக சந்தையில் விற்பனை செய்வதற்கு விவசாயிகளை அனுமதித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.