BWF (பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு) உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியானது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் கௌஹாத்தியில் (அசாம்) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் சுஹந்தினாட்டா கோப்பை (கலப்பு அணி போட்டி) மற்றும் ஒவ்வொரு ஆட்டத்திற்குமான ஸ்கோர்/மதிப்பு வழங்கல் எனும் Eye-Level கோப்பை (தனி நபர் போட்டிகள்) என இரண்டு பிரிவுகள் உள்ளன.
இந்தியா இதற்கு முன்னதாக, இப்போட்டியில் 11 தனிநபர் பதக்கங்களை வென்றுள்ளது மற்றும் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் புனேவில் இப்போட்டியினை நடத்தியது.
2025 ஆம் ஆண்டு போட்டியை நடத்துவதுடன், இந்த சாம்பியன்ஷிப் போட்டியினை இரண்டு முறை நடத்திய நான்காவது ஆசிய நாடாக இந்தியா மாற உள்ளது.