TNPSC Thervupettagam
November 8 , 2022 917 days 448 0
  • குஜராத் மாநிலத்தின் வதோதராவில்  அமைக்கப்பட உள்ள C-295 விமானம் தயாரிப்பு ஆலைக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • இந்திய விமானப்படைக்கான (IAF) போக்குவரத்து விமானங்களை டாடா-ஏர்பஸ் குழுமமானது தயாரித்து வழங்குகிறது.
  • இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தினால் இராணுவ விமானம் தயாரிக்கப் படுவதற்கான முதல் திட்டம் இதுவாகும்.
  • C295 விமானம் ஐரோப்பா தவிர வேறு ஒரு நாட்டில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • C295 விமானமானது ஆரம்பத்தில் கன்ஸ்ட்ருசியோனிஸ் ஏரோநாட்டிகஸ் SA என்ற ஸ்பானிய விமான உற்பத்தி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது.
  • இந்திய விமானப் படையின் Avro-748 விமானங்களுக்குப் பதிலாக 56 C295 ரக விமானங்களை வாங்குவதற்கு ஏர்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்துடன் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியா ஒப்பந்தம் மேற் கொண்டது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஏர்பஸ் நிறுவனமானது முதல் 16 விமானங்களை ‘பறக்கத் தயாரான' நிலையில் வழங்கும்.
  • இரு நிறுவனங்களுக்கிடையேயான தொழில்துறை கூட்டாண்மையின் ஒரு பகுதியாக டாடா மேம்பட்ட அமைப்புத் தயாரிப்பு நிறுவனத்தின் (TASL) மூலம் மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்