மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகமானது C CARES 2.0 என்ற வலை தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது நிலக்கரி சுரங்க வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (CMPFO) புதுப்பிக்கப்பட்ட வலை தளம் ஆகும்.
இந்தத் தளமானது, நிகழ்நேரக் கண்காணிப்பு, நேரடிப் பயன் பரிமாற்றம் மற்றும் கை பேசி அடிப்படையிலான அணுகலை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிலக்கரித் துறை தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியச் சேவைகளை மிக எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
CMPFO ஆனது 1948 ஆம் ஆண்டில் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது.