C-FLOOD என்பது வெள்ளம் பாதித்தப் பகுதிகளின் வரைபடங்கள் மற்றும் நீர் மட்ட கணிப்புகளுடன் கிராம அளவில் வெள்ளப் பாதிப்புகள் குறித்த முன்னறிவிப்புகளை இரண்டு நாட்கள் முன்கூட்டியே வழங்கும் ஒரு வலையமைப்பு அடிப்படையிலான தளமாகும்.
மேம்பட்டப் பேரிடர் மேலாண்மைக்காக தேசிய மற்றும் பிராந்திய நிறுவனங்களின் வெள்ள மாதிரியாக்கத் தரவை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கிறது.
தற்போது, இந்த C-FLOOD தளத்தில் மகாநதி, கோதாவரி மற்றும் தபதி நதிப் படுகைகள் குறித்த தரவுகள் அடங்கும். விரைவில் மேலும் சில நதிப் படுகைகளைச் சேர்க்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
இது தேசிய மீக்கணினித் திட்டத்தின் (NSM) கீழ் மேம்படுத்தப் பட்ட இரு பரிமாண நீரியக்கவியல் மாதிரியாக்கம் மற்றும் அதிஉயர் செயல்திறன் கொண்ட ஒரு கணினி முறைமையை (HPC) பயன்படுத்துகிறது.
இந்தத் தளத்தினைப் புனேவில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) மற்றும் மத்திய நீர் வள ஆணையம் (CWC) உருவாக்கியுள்ளன.