மகாராஷ்டிரா அரசானது C40 நகரங்கள் வலையமைப்பு என்ற ஒரு அமைப்புடன் இணைந்து மும்பைப் பருவநிலை நடவடிக்கைச் செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டமானதுஉலக வெப்பமயமாதலை 1.5°C என்ற அளவிற்குள் நிலை நிறுத்தச் செய்வதற்காக வேண்டி பாரீஸ் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பருவ நிலை இலக்குகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் உமிழ்வினைக் குறைத்தல் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட C40 நகரங்கள் பருவநிலைத் தலைமைத்துவக் குழுமம் ஆனது, உலகம் முழுவதும் உள்ள 97 நகரங்களின் ஒரு சங்கமாகும்.
இது பருவநிலை இடர்களைத் தணிப்பதற்காக வேண்டி பசுமை இல்ல வாயு உமிழ்வினைக் குறைத்தல் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போரிடுவதை நோக்கமாகக் கொண்ட மேயர்களை உள்ளடக்கிய ஒரு உலகளாவிய வலையமைப்பு ஆகும்.
C40 முன்னெடுப்பின் நோக்கம், இந்தப் பத்தாண்டுகளுக்குள் அதன் உறுப்பினர் நகரங்களின் உமிழ்வினைப் பாதியளவாகக் குறைப்பதேயாகும்.
தற்போது 5 இந்திய நகரங்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளன.
அவை டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை ஆகியனவாகும்.