TNPSC Thervupettagam

CAA குடியுரிமைச் செயலாக்கம்

August 25 , 2026 16 hrs 0 min 24 0
  • 2019 ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) கீழ் நிலுவையில் உள்ள குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்க எட்டு மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அதிகாரம் அளித்துள்ளது.
  • அந்த எட்டு அதிகார வரம்புகள் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் (பழங்குடியினர் பகுதிகள் தவிர), திரிபுரா (பழங்குடியினர் பகுதிகள் தவிர), ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவையாகும்.
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று அறிவிக்கப்பட்ட குடியுரிமை (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2026 குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6B-இன் கீழ் விண்ணப்பங்களைச் செயல்படுத்த ஆட்சியர்களுக்கு அனுமதி அளிக்கிறது.
  • CAA சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை உள்ளடக்கியது.
  • ஆட்சியர்கள் ஆவணங்களைச் சரிபார்க்கவும், விசாரணைகளை மேற்கொள்ளவும், விசுவாசப் பிரமாணம் செய்து வைக்கவும் மற்றும் தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு குடியுரிமை வழங்கவும் முடியும்.
  • நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் முந்தைய அதிகாரம் பெற்ற குழுக்கள்/மாவட்ட அளவிலான குழுக்களிடமிருந்து சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்