பயணிகள் வாகனங்களுக்கான பெருநிறுவன சராசரி எரிபொருள் திறன் (CAFE)-III விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது, இது 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2032 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை பொருந்தும்.
எரிபொருள் திறன் இலக்கு இன்னும் கடுமையாக்கப்பட்டு, 2027–28 ஆம் ஆண்டில் 100 கிலோமீட்டருக்கு 3.996 லிட்டரிலிருந்து 2031–32 ஆம் ஆண்டில் 100 கிலோமீட்டருக்கு 3.3273 லிட்டராக மேம்படுத்தப்படும்.
ஒவ்வொரு மின்கல மின்சார வாகனமும் (BEV) 3 வாகனங்களாகக் கணக்கிடப்படும், அதே நேரத்தில் பிளக்-இன் ஹைபிரிட்கள், ஸ்ட்ராங் ஹைபிரிட்கள் மற்றும் பிளெக்ஸ்-எரிபொருள் வாகனங்கள் கூடுதல் வரவுகளைப் பெறும்.
ஹைபிரிட்கள், பிளெக்ஸ்-எரிபொருள் வாகனங்கள், உயிரி எரிபொருட்கள் மற்றும் மீளுருவாக்கம் பிரேக்கிங் (Regenerative braking) மற்றும் டயர் அழுத்தக் கண்காணிப்பு போன்ற எரிபொருள் சேமிப்பு தொழில்நுட்பங்களுக்கு இவ்விதிமுறைகள் ஊக்கத்தொகைகளை வழங்குகின்றன.
எத்தனால் கலந்த பெட்ரோல், அழுத்தப்பட்ட உயிரிவாயு மற்றும் உயிரி எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான அறிவிக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை கார்பன் சமநிலை காரணிகள் குறைக்கும்.