இந்தியாவின் தலைமைத் தணிக்கையாளர் (CAG) அலுவலகமானது ஐதராபாத்தில் நிதி சார் தணிக்கைக்கான ஒரு சிறப்பு மையத்தை அமைக்க உள்ளது.
இந்த மையமானது, நிதி தணிக்கையில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாட்டில் கவனம் செலுத்தும்.
மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறைகளைப் பயன்படுத்தி பொது தணிக்கையை நவீனமயமாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பு என்பது அதன் செயல்முறைகளை தரப்படுத்தவும், தணிக்கைச் செயல்பாடுகளை ஒத்திசைக்கவும், தணிக்கை மற்றும் கணக்குத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் உதவும்.