மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த இந்தியாவின் முதல் டிஜிட்டல் தரவுக் களஞ்சியமான 'CALM-Brain', பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது.
இது நிம்ஹான்ஸ் (NIMHANS) மற்றும் தேசிய உயிரியல் அறிவியல் மைய (NCBS) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
'CALM-Brain' களஞ்சியமானது போதை பழக்கம், இருமுனையக் குறைபாடு, முதுமை மறதி, மனச் சுழற்சி நோய் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா போன்ற மனநலக் கோளாறுகள் குறித்த தரவுகளைச் சேமிக்கிறது.
இதில் மருத்துவத் தரவுகள், மூளை வருடல், நடத்தை மற்றும் மரபணு தொடர்பான தரவுகள் ஆய்விற்காகத் தொகுக்கப்பட்டுள்ளன.
மனநலக் கோளாறுகளைச் சிறப்பாகப் புரிந்து கொள்ளவும், துல்லியமாகக் கண்டறியவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் இந்தக் களஞ்சியம் பெரிதும் உதவும்.