TNPSC Thervupettagam

CapaCITIES திட்டம்

July 22 , 2026 13 hrs 0 min 44 0
  • 'நகர்ப்புற பருவநிலைப் பின்னடைவை அளவிடுதல்: CapaCITIES மரபு மற்றும் முன்னோக்கிய பாதை' என்ற நிகழ்வு புது தில்லியில் நடைபெற்றது என்பதுடன் இதில் மூன்று CapaCITIES அறிவுசார் தயாரிப்புகள் வெளியிடப்பட்டன.
  • இந்தியாவில் குறைந்த கார்பன் மற்றும் பருவநிலைத் திறன் கொண்ட நகர மேம்பாட்டிற்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் (CapaCITIES) 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • பருவநிலைத் திறன் கொண்ட நகர்ப்புற மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இந்தியா மற்றும் பூட்டானில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தால் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப் பட்டது.
  • நகரங்களில் பருவநிலைத் திட்டமிடலை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் 2070 ஆம் ஆண்டிற்கான நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை இத்திட்டம் ஆதரிக்கிறது.
  • இது கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, அகமதாபாத், ராஜ்கோட், வதோதரா, உதய்பூர் மற்றும் சிலிகுரி உள்ளிட்ட 8 நகரங்களுக்கு ஆதரவளித்துள்ளது.
  • இது நிகர-பூஜ்ஜிய பருவநிலைத் திறன் நகர செயல் திட்டங்களை (CRCAPs) உருவாக்கியது, நகரங்களில் பருவநிலை செயல் பிரிவுகளை நிறுவியது, 1,000க்கும் மேற்பட்டவர்களுக்குப் பயிற்சியளித்தது, மேலும் பருவநிலைத் திட்டமிடல் கட்டமைப்புகள் மூலம் 35 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ஆதரவளித்தது.
  • மிதக்கும் சூரிய மின் நிலையங்கள், சூரிய ஒளி மின்சாரப் பேருந்து மின்னேற்ற நிலையங்கள், வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள், ஏரி சீரமைப்பு, பசுமைப் போக்குவரத்து மண்டலங்கள் மற்றும் நகர்ப்புற காடு வளர்ப்புத் திட்டங்கள் போன்ற நகர்ப்புறத் தீர்வுகளை இத்திட்டம் செயல்படுத்தியது.
  • நிலையான நகர்ப்புற மேம்பாட்டை ஆதரிப்பதற்காக வெளியிடப்பட்ட மூன்று அறிவு சார் தயாரிப்புகள்: நிகர-பூஜ்ஜிய பருவநிலைத் திறன் நகரங்களுக்கான வழிமுறை கருவித் தொகுப்பு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான (ULB) ஆற்றல் மாற்ற வழி காட்டி புத்தகம் மற்றும் குறைந்த கார்பன் நிதி வெள்ளை அறிக்கை ஆகியனவாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்