மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஆனது புற்றுநோய் AI மற்றும் தொழில்நுட்பம் என்ற சவாலை (CATCH) அறிமுகப்படுத்தியது.
CATCH என்பது தேசியப் புற்றுநோய் கட்டமைப்புடன் (NCG) இணைந்து, IndiaAI திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் கூட்டுப் புத்தாக்க நிதி வழங்கீட்டுத் திட்டமாகும்.
இந்தியா முழுவதும் புற்றுநோய் பரிசோதனை, நோயறிதல், சிகிச்சை மற்றும் நோயாளிப் பராமரிப்பு ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் (AI) சரிபார்ப்பு மற்றும் பயன்பாட்டை விரைவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
நோயின் ஆரம்ப கட்ட கண்டறிதல், மருத்துவம் சார்ந்த முடிவெடுத்தல், நோயாளிகளுடனான மருத்துவ ஈடுபாடு, ஆராய்ச்சி, மருத்துவமனை செயல்பாடுகள் மற்றும் தரவு மேலாண்மை ஆகியவற்றிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்தத் தீர்வுகளை CATCH ஆதரிக்கும்.
இந்த முன்னெடுப்பானது, இந்தியாவின் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பு மற்றும் சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் பராமரிப்புக்கான வரையறுக்கப்பட்ட அணுகலை நிவர்த்தி செய்கிறது.