இந்தியத் தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தின் துணை நிறுவனமான NSE என்ற அறக்கட்டளையானது இத்தகையப் புதுமைமிக்க திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் தொலைதூர ‘உயர்நோக்கு இலட்சிய மாவட்டங்களில்’ தடுப்பூசி வழங்கும் வசதியை அதிகரிப்பதற்காக அடிமட்ட பங்குதாரர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைப்பு ஆகியவை மேற்கொள்ளும் முயற்சிகளை இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கும்.
இத்திட்டமானது மகாராஷ்டிராவில் நந்தூர்பர் மற்றும் உஸ்மானாபாத், ராஜஸ்தானில் கரௌலி, தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மற்றும் நாகலாந்தில் கிப்பைர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப் படுகிறது.
CAVACH என்றால் சுகாதாரத்திற்கான கோவிட்-19 உதவி மற்றும் தடுப்பு மருந்து உதவி வழங்கும் பிரச்சாரம் (Covid-19 and Vaccination Assistance Campaign for Health) என்று பொருளாகும்.