ஆர்மீனியாவின் யெரெவனில் நடைபெற்ற உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் (CBD) 17 ஆவது அமர்வில் (COP-17), பல்லுயிர்தன்மை பாதுகாப்பிற்கான தனது அர்ப்பணிப்பை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது.
குன்மிங்-மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர்தன்மை கட்டமைப்பு (KMGBF) 23 தேசிய இலக்குகள் மற்றும் 142 குறிகாட்டிகளுடன் இந்தியாவின் தேசிய பல்லுயிர்தன்மை உத்தி மற்றும் செயல் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் 1,134 பாதுகாக்கப்பட்ட பகுதிகள், 103 ராம்சார் தளங்கள், 57 பல்லுயிர்தன்மை கொண்ட பாரம்பரியத் தளங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (UNESCO) மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டத்தின் கீழான 13 உயிர்க்கோளக் காப்பகங்கள் உட்பட மொத்தம் 18 உயிர்க் கோளக் காப்பகங்கள் உள்ளன.
மிஷ்டி திட்டம் (MISHTI - மாங்குரோவ் காடுகள் மேம்பாடு மற்றும் வருமானத்திற்கான முன்னெடுப்பு), ஈரநிலப் பாதுகாப்பிற்கான அம்ரித் தரோஹர், மிஷன் லைஃப் (Mission LiFE - சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) மற்றும் ஏக் பேட் மா கே நாம் ஆகியன முக்கிய முன்னெடுப்புகள் ஆகும்.
போதிய அளவிலான சர்வதேச நிதியுதவி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கலி நிதியம் (Cali Fund) உட்பட மரபணு வளங்கள் மீதான டிஜிட்டல் வரிசைத் தகவலில் (DSI) இருந்து நியாயமான பலன்களைப் பகிர்தல் ஆகியவற்றை இந்தியா வலியுறுத்தி உள்ளது.