பல்லுயிர் மரபுகள் (CBD) தொடர்பான அமலாக்க துணை அமைப்பின் 7-வது கூட்டம் (SBI 7) கென்யாவின் நைரோபியில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 முதல் 12 வரை நடைபெற்றது.
பல்லுயிர் மரபுகள் (CBD), அதன் நெறிமுறைகள் மற்றும் குன்மிங்-மாண்ட்ரீல் உலகளாவியப் பல்லுயிர் கட்டமைப்பு (GBF) ஆகியவற்றை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை SBI மதிப்பாய்வு செய்கிறது.
இந்தக் கூட்டமானது GBF-இன் உலகளாவிய இடைக்கால மதிப்பாய்வைக் கருத்தில் கொண்டதுடன், 17-வது தரப்பினரின் மாநாட்டிற்கான (COP17) பரிந்துரைகளையும் தயார் செய்தது.
வளங்களைத் திரட்டுதல், திறன் மேம்பாடு, செயற்கை உயிரியல், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் துணை தேசிய அரசாங்கங்களின் பங்கேற்பு ஆகியவை முக்கியப் பிரச்சினைகளில் அடங்கும்.
இதன் பரிந்துரைகள் 2026 ஆம் ஆண்டு அக்டோபரில் ஆர்மீனியாவின் யெரெவனில் நடைபெறவுள்ள CBD COP17-இல் பல்லுயிர் பேச்சுவார்த்தைகளை வடிவமைக்க உதவும்.