குஜராத்தின் காந்திநகரில் இந்தியாவின் முதல் மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயம் (CBDC) அடிப்படையிலான பொது விநியோக முறையை (PDS) மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த சோதனைத் திட்டத்தை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் குஜராத் அரசுடன் இணைந்து தொடங்கி உள்ளது.
இந்த அமைப்பின் கீழ், பயனாளிகள் நியாய விலைக் கடைகளில் (FPS) மானிய விலையில் உணவு தானியங்களை வாங்க தங்கள் டிஜிட்டல் பணக்கோப்புகளில் நிரல்படுத்தக் கூடிய டிஜிட்டல் ரூபாய் (e₹) கூப்பன்களைப் பெறுகிறார்கள்.
குஜராத்தின் அகமதாபாத், ஆனந்த், வல்சாத் மற்றும் சூரத் மாவட்டங்களில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது என்பதோடு மேலும் சண்டிகர், புதுச்சேரி மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய ஒன்றியப் பிரதேசங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்.
இந்த முன்முயற்சியானது CBDC-ஐ பொது விநியோக முறையுடன் ஒருங்கிணைத்து, பாதுகாப்பான, கண்காணிக்கக்கூடிய மற்றும் நிகழ்நேரப் பரிவர்த்தனைகளை செயல் படுத்துகிறது.