TNPSC Thervupettagam

CBI தலைவர் பதவிக்கு மீண்டும் அலோக் வர்மா

January 9 , 2019 2329 days 727 0
  • இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் ஆணைப்படி உச்ச நீதிமன்ற அமர்வானது, எவ்வித முக்கியமான கொள்கை முடிவெடுக்கும் அதிகாரங்களும் வழங்காமல் CBI அமைப்பின் தலைவராக அலோக் குமார் வர்மாவை மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது.
  • இது அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை முழுமையாக அதிகாரத்திலிருந்து நீக்கி 2018 அக்டோபர் 23 ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக வழங்கப்பட்டது.
  • இவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்திய ஊழல் தடுப்பு ஆணையமானது (CVC – Central Vigilance Commission) வெற்றிகரமாக விசாரணையை நடத்திய பின்னர் CBI தலைவரை நியமனம் செய்யும் உயர் அதிகாரம் கொண்ட குழுவால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்த உயர் அதிகாரம் கொண்ட குழுவானது பிரதமர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்