இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் ஆணைப்படி உச்ச நீதிமன்ற அமர்வானது, எவ்வித முக்கியமான கொள்கை முடிவெடுக்கும் அதிகாரங்களும் வழங்காமல் CBI அமைப்பின் தலைவராக அலோக் குமார் வர்மாவை மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது.
இது அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை முழுமையாக அதிகாரத்திலிருந்து நீக்கி 2018 அக்டோபர் 23 ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக வழங்கப்பட்டது.
இவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்திய ஊழல் தடுப்பு ஆணையமானது (CVC – Central Vigilance Commission) வெற்றிகரமாக விசாரணையை நடத்திய பின்னர் CBI தலைவரை நியமனம் செய்யும் உயர் அதிகாரம் கொண்ட குழுவால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உயர் அதிகாரம் கொண்ட குழுவானது பிரதமர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.