'Call Before u Dig' (CBuD) என்ற செயலியானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைதொடர்பு துறையின் ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.
தோண்டும் பணிகளைத் தொடங்குவதற்கு முன், தற்போதுள்ள நிலத்தடியில் செல்லும் சேவைகள் குறித்து விசாரணை மேற்கொள்கின்ற தோண்டும் நிறுவனங்களுக்கு ஒரு இடைமுகத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒளியிழை கம்பிவடங்கள் போன்ற நிலத்தடி அமைப்புகள் சேதமடைவதால் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படுகின்ற சுமார் ரூ. 3,000 கோடி (400 மில்லியன் டாலர்) இழப்பினை இது தடுக்கும்.
எரிவாயுக் குழாய்கள், நீர் குழாய்கள் மற்றும் ஒளியிழைக் கம்பிவடங்கள் போன்ற பல்வேறு நிலத்தடிச் சேவை அமைப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இது உதவும்.