அசாமின் கௌஹாத்தியில் கோடெக்ஸ் குழுவின் (CCSCH) 8வது அமர்வை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.
பெரிய ஏலக்காய், வெண்ணிலா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றிற்கான மூன்று புதிய கோடெக்ஸ் தரநிலைகள் அமர்வின் போது முடிவு செய்யப்பட்டன.
இந்த மூன்றையும் சேர்த்ததன் மூலம், கோடெக்ஸ் தற்போது மஞ்சள், மிளகு, சீரகம் மற்றும் குங்குமப்பூ உள்ளிட்ட 19 நறுமண/மசாலாப் பொருட்களுக்கான உலகளாவிய தரநிலைகளை இறுதி செய்துள்ளது.
கோடெக்ஸ் உணவூட்டப் பொருட்கள் ஆணையத்தின் கீழ் 2013 ஆம் ஆண்டில் நறுமண மற்றும் சமையல் சார்ந்த மூலிகைகளுக்கான கோடெக்ஸ் குழு நிறுவப்பட்டது.
இது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் கூட்டு அமைப்பாகும்.
நறுமணப் பொருட்கள் வாரியம் அறிவியல் சார்ந்த உள்ளீடுகளை ஒருங்கிணைத்தது, செயல்பாட்டு ஆவணங்களைத் தயாரித்து, கோடெக்ஸ் நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்தது.