டிஜிட்டல் போலீஸ் சேவைகளை வழங்குவதற்காக, தமிழ்நாடு காவல்துறை, CCTNS 2.0 (குற்றம் மற்றும் குற்ற கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் அமைப்புகள்) உடன் ஒருங்கிணைந்த ஒரு புதிய வலைத் தளத்தைத் தொடங்கியது.
புதிய தளமானது மூன்றாம் தரப்பினரையோ அல்லது பொதுமக்களையோ முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பார்க்கவோ பதிவிறக்கவோ அனுமதிக்காது.
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர் அல்லது புகார் அளித்தவர் மட்டுமே வலைதளம் மூலம் FIR ஐ அணுகவும் பதிவிறக்கவும் முடியும்.
முகவர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்புக்காக, இந்த தளம் இயங்கக் கூடிய குற்றவியல் நீதி அமைப்பு (ICJS) உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு நீதிமன்றங்கள், தடயவியல் அறிவியல் ஆய்வகங்கள், சிறைச் சாலைகள் மற்றும் வழக்கு தொடரும் துறைகளுடன் நிகழ்நேர தரவுப் பகிர்வை செயல் படுத்துகிறது.
டிஜிட்டல் சான்றுகள் மேலாண்மை மற்றும் அழைப்பாணைகளை மின்னணு முறையில் வழங்குவதை மேம்படுத்த e-Sakshya மற்றும் e-Summon பயன்பாடுகள் செயல் படுத்தப் பட்டுள்ளன.
CCTNS 2.0 இன் கீழ் சேவைகளைப் பயன்படுத்த, பயனர்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்து உள்நுழைவுச் சான்றுகளை உருவாக்க வேண்டும்.