சென்னை உயர் நீதிமன்றமானது, நான்கு மாதங்களுக்குள் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு & அமைப்புகளின் (CCTNS) இரண்டாம் (2.0) கட்டத்தினை செயல்படுத்துமாறு தமிழ்நாடு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இணையக் குழுவானது, ஒரு தேசிய அளவிலான ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி அமைப்பு (ICJS) தளத்தினைத் துவக்கியது.
இது மாநில காவல் துறைகளால் பயன்படுத்தப்படும் CCTNS தளங்கள், நீதிமன்றங்கள் மூலம் பயன்படுத்தப்படும் வழக்கு தகவல் அமைப்பு (CIS) தளங்கள் மற்றும் மின்னணு சிறைச்சாலை மேலாண்மை, இணையத் தடயவியல் மற்றும் இணைய வழி வழக்கு விசாரணை தளங்களை ஒன்றோடொன்று இணைக்கிறது.
உயர் நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை நீதிமன்றங்கள் முதல் தகவல் அறிக்கைகள் (FIR), வழக்குக் குறிப்பேடுகள், பல்வேறு குற்றப் பத்திரிகைகள் மற்றும் PDF வடிவத்தில் பதிவேற்றப் பட்ட பிற ஆவணங்களை மிக எளிதாக அணுக முடியும் என்பதை உறுதி செய்வதே ICJS தளத்தின் நோக்கமாகும்.
இந்த ICJS தளத்தினைச் செயல்படுத்துவதற்கு தேசிய தகவல் மையத்துடன் இணைந்து பணியாற்றுமாறு தேசியக் குற்றப் பதிவுகள் வாரியத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.