27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்தியாவின் “பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பிற்கான உலகளாவியக் கூட்டணியில்" (Coalition for Disaster Resilient Infrastructure - CDRI) உறுப்பினராகச் சேர்ந்துள்ளது.
CDRI என்பது பல நாடுகள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிலையங்கள், தனியார் துறைகள், பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒரு சர்வதேசக் கூட்டணியாகும்.
இந்த திட்டம் பேரழிவைத் தடுக்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
CDRI திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2019 ஆம் ஆண்டில் தொடங்கி வைக்கப் பட்டது.
ஸ்பெயினில் நடைபெற்ற ஐ.நா.வின் காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.