ஏஞ்சல் வரி மற்றும் இதர வரி சம்பந்தபட்ட பிரச்சினைகள் தொடர்பான தொழில் தொடக்கங்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட சிறப்புப் பிரிவின் உருவாக்கத்தை மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது.
இந்தப் பிரிவானது வருமான வரி மற்றும் கணினிமயமாக்கல் குழுவின் உறுப்பினர்தலைமையில் செயல்படும்.
வருமான வரிச் சட்டம்-1961 இன் நிர்வாகம் தொடர்பாக தொழில்தொடக்கங்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் வரி தொடர்பான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் இந்த பிரிவு செயல்படும்.