ஐக்கிய நாடுகள் அமைப்பானது சமீபத்தில் CEOS COAST எனப்படும் ஒரு பன்னாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
CEOS COAST என்பது புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோள்கள், கடலோரக் கண்காணிப்பு, பயன்பாடுகள், சேவைகள் மற்றும் கருவிகள் மீதான ஒரு குழு ஆகும்.
இந்தத் திட்டமானது அமெரிக்காவின் தேசியக் கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு மற்றும் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் ஆகியவற்றால் இணைந்து மேற்கொள்ளப் படுகிறது.
செயற்கைக்கோள் மற்றும் நிலம் சார்ந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் கடலோரப் பகுதிகளின் தரவுகளுடைய துல்லியத் தன்மையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கருத்துருவானது கண்டங்களின் கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் சிறிய தீவு நாடுகளில் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் கடலோரப் பகுதியின் எதிர்திறன் ஆகியவையாகும்.