இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது (ICMR), அதிர்ச்சியினால் ஏற்பட்ட மூளைக் காயத்திற்காக (TBI) CEREBO எனப்படும் ஒரு சிறிய, ஊடுருவல் சாராத கண்டறியும் கருவியை அறிமுகப்படுத்தியது.
இந்தச் சாதனம் ஆனது, மண்டையோட்டுக்குள் உள்ள இரத்தப்போக்கு மற்றும் திசுத் திரவ வீக்கம் (எடிமா) ஆகியவற்றினை ஒரு நிமிடத்திற்குள் கண்டறிவதற்காக அண்மை அகச்சிவப்பு நிறமாலை மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்துகிறது.
CEREBO ஆனது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களில் பயன்படுத்தப் பாதுகாப்பானது.
இது போபாலில் உள்ள AIIMS, பெங்களூருவில் உள்ள NIMHANS ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டது.