நுண்நிதி நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாதத் திட்டம் 2.0 (CGSMFI-2.0) என்பதை இந்திய அரசு ₹20,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கியுள்ளது.
நுண்நிதி நிறுவனங்களுக்கு (MFIs) கடன் வழங்கும் உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு (MLIs) உத்தரவாத ஆதரவை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
NBFC-MFI-கள் ஆண்டு வருமானம் ₹3,00,000 வரை உள்ள குடும்பங்களுக்கு பிணையில்லா கடன்களை வழங்குகின்றன.
இத்திட்டம் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள 'தேசிய கடன் உத்திரவாத அறங்காவலர் நிறுவனத்தால்' நிர்வகிக்கப்படுகிறது.
இது நிதிச் சேர்ப்பு, சிறு வணிகங்களுக்கான ஆதரவு மற்றும் இந்தியாவில் வறுமை ஒழிப்பிற்கு உதவுகிறது.