TNPSC Thervupettagam

Cheer Pheasant பாதுகாப்புத் திட்டம் - இமாச்சலப் பிரதேசம்

October 29 , 2026 2 days 65 0
  • இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட சீர் பெசண்ட் பறவைகளின் உயிர்வாழும் விகிதம் 2019-20 ஆம் ஆண்டில் 11.11% ஆக இருந்த நிலையில், 2024-25 ஆம் ஆண்டில் அது 100% ஆகப் பதிவாகியுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற வனவிலங்கு வாரத்தின் போது, வளர்ப்பிடங்களில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட 12 சீர் பெசண்ட்கள் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்டிக்கு அருகிலுள்ள மொய் ஜூப்பரில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன. இது செரி மற்றும் ஷில்லி-மெஹ்லி ஆகிய இடங்களுக்குப் பிறகு இத்திட்டத்தின் மூன்றாவது விடுவிப்புத் தளமாக மாறியது.
  • உள்ளூரில் சிர் திட்டார் (Chir Tittar) என்று அழைக்கப்படும் சீர் பெசண்ட் (கேட்ரியஸ் வாலிச்சி), IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய (Vulnerable) இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I-இன் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • கடியுன் சீர் பெசண்ட் இனப்பெருக்க மையம் சோலன் மாவட்டத்தில் உள்ள சாய்ல் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
  • காட்டுத்தீ, மேய்ச்சல் மற்றும் தீவனச் சேகரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் வாழ்விட சீரழிவு இந்த உயிரினத்திற்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்