Cheer Pheasant பாதுகாப்புத் திட்டம் - இமாச்சலப் பிரதேசம்
October 29 , 2026 14 hrs 0 min 63 0
இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட சீர் பெசண்ட் பறவைகளின் உயிர்வாழும் விகிதம் 2019-20 ஆம் ஆண்டில் 11.11% ஆக இருந்த நிலையில், 2024-25 ஆம் ஆண்டில் அது 100% ஆகப் பதிவாகியுள்ளது.
2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற வனவிலங்கு வாரத்தின் போது, வளர்ப்பிடங்களில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட 12 சீர் பெசண்ட்கள் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்டிக்கு அருகிலுள்ள மொய் ஜூப்பரில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன. இது செரி மற்றும் ஷில்லி-மெஹ்லி ஆகிய இடங்களுக்குப் பிறகு இத்திட்டத்தின் மூன்றாவது விடுவிப்புத் தளமாக மாறியது.
உள்ளூரில் சிர் திட்டார் (Chir Tittar) என்று அழைக்கப்படும் சீர் பெசண்ட் (கேட்ரியஸ் வாலிச்சி), IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய (Vulnerable) இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I-இன் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளது.
கடியுன் சீர் பெசண்ட் இனப்பெருக்க மையம் சோலன் மாவட்டத்தில் உள்ள சாய்ல் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
காட்டுத்தீ, மேய்ச்சல் மற்றும் தீவனச் சேகரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் வாழ்விட சீரழிவு இந்த உயிரினத்திற்கு அச்சுறுத்தலாக அமைகிறது.