TNPSC Thervupettagam
September 25 , 2025 15 hrs 0 min 62 0
  • Chennai One என்பது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் தொடங்கப்பட்ட ஒரு கைபேசி செயலியாகும்.
  • சென்னை நகரம் முழுவதும் பயணங்களைத் திட்டமிடுவதற்கும் முன்பதிவு செய்வதற்கும் இந்த செயலி ஒரு ஒருங்கிணைந்த தளமாக செயல்படுகிறது.
  • இது பெருநகரப் போக்குவரத்துக் கழக (MTC) பேருந்துகள், சென்னை மெட்ரோ இரயில், புறநகர் இரயில்கள், ஆட்டோக்கள் மற்றும் வாடகை வண்டிகள் உட்பட பல போக்குவரத்து முறைகளை ஆதரிக்கிறது.
  • இந்தச் செயலியானது பயனர்கள் இணக்கமான போக்குவரத்துச் சேவைகளில் செல்லு படியாகும் ஒற்றை QR (விரைவு உரலி) குறியீடு பயணச் சீட்டினை உருவாக்க அனுமதிக்கிறது.
  • சென்னை ஒருங்கிணைந்தப் பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தைத் தொடங்கியது.
  • இது "இந்தியாவின் முதல்" ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து டிக்கெட் அமைப்பு என்று விவரிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்