Chennai One என்பது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் தொடங்கப்பட்ட ஒரு கைபேசி செயலியாகும்.
சென்னை நகரம் முழுவதும் பயணங்களைத் திட்டமிடுவதற்கும் முன்பதிவு செய்வதற்கும் இந்த செயலி ஒரு ஒருங்கிணைந்த தளமாக செயல்படுகிறது.
இது பெருநகரப் போக்குவரத்துக் கழக (MTC) பேருந்துகள், சென்னை மெட்ரோ இரயில், புறநகர் இரயில்கள், ஆட்டோக்கள் மற்றும் வாடகை வண்டிகள் உட்பட பல போக்குவரத்து முறைகளை ஆதரிக்கிறது.
இந்தச் செயலியானது பயனர்கள் இணக்கமான போக்குவரத்துச் சேவைகளில் செல்லு படியாகும் ஒற்றை QR (விரைவு உரலி) குறியீடு பயணச் சீட்டினை உருவாக்க அனுமதிக்கிறது.
சென்னை ஒருங்கிணைந்தப் பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தைத் தொடங்கியது.
இது "இந்தியாவின் முதல்" ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து டிக்கெட் அமைப்பு என்று விவரிக்கப்படுகிறது.