TNPSC Thervupettagam

CICA உச்சி மாநாடு 2026

October 23 , 2026 16 hrs 0 min 23 0
  • ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கை வளர்க்கும் நடவடிக்கைகளுக்கான மாநாட்டின் (CICA) 7 வது உச்சிமாநாடு அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது, இதில் ஆசியாவில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஒருமித்த அடிப்படையிலான ஒத்துழைப்பிற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.
  • அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிராக ஒன்றிணைய CICA உறுப்பினர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்ததுடன், தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதையை வலியுறுத்தியது.
  • பிராந்திய இணைப்புத் திட்டங்கள் வெளிப்படையானதாகவும், நிதி ரீதியாக சாத்தியமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று இந்தியா கூறியது.
  • இந்த உச்சிமாநாடு பாகு பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது, ஆசியாவில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் மேம்பாட்டிற்கும் இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை முக்கியமானதாக முன்னிலைப் படுத்தியது.
  • இந்தியா CICA அமைப்பின் நிறுவன உறுப்பினராக உள்ளது மற்றும் ஆசியாவில் உரையாடல், கருத்தொற்றுமை உருவாக்கம் மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு முக்கியமான தளமாக இதைக் கருதுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்