இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CII) தனது 125வது ஆண்டு விழாவை 2020 ஆம் ஆண்டில் கொண்டாடுகின்றது.
கருத்துரு: CII@ 125: வணிகம் மற்றும் அதற்கு அப்பால்.
CII ஆனது 1895 ஆம் ஆண்டில் பொறியியல் மற்றும் இரும்பு வர்த்தகச் சங்கமாகத் (Engineering and Iron Trades Association - EITA) தனது பயணத்தைத் தொடங்கியது.
CIIன் 125வது ஆண்டு தினத்தைக் குறிப்பதற்காக தமிழக அரசானது “பசுமை தொழில்களுக்காகச் செயல்படுவதற்கான நேரடி ஒப்புதல்” (Consent To Operate) என்ற ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டமானது எளிதில் தொழில் தொடங்குவதை மேம்படுத்தவும் உதவுகின்றது.
இந்தத் திட்டமானது பசுமை வகைத் தொழிற் சாலைகளின் அனுமதிக்கான விதிமுறைகளைத் தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.