CII வேளாண் தொழில்நுட்ப இந்தியாவின் 13-வது பதிப்பு 2018
December 12 , 2018 2430 days 705 0
2018 ஆம் ஆண்டிற்கான இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பின் (Confederation of Indian industry - CII) வேளாண் தொழில்நுட்ப இந்தியாவின் 13-வது பதிப்பை இந்தியக் குடியரசுத் தலைவர் சண்டிகரில் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியின் கருத்துருவானது “விவசாயத் துறையில் தொழில்நுட்பம் : விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்துதல்” என்பதாகும்.
இக்கண்காட்சியின் பங்காளர் நாடாக கிரேட் பிரிட்டனும் கவன ஈர்ப்பு நாடுகளாக சீனா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் உள்ளன.
பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை இந்த கண்காட்சியை நடத்திய மாநிலங்கள் ஆகும்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகம் ஆகிய இரண்டும் இந்த கண்காட்சியை நடத்தய பங்குதாரர் அமைச்சகங்களாகும்.